விவசாயிகளுக்கான உர மானிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரின் யோசனை
அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயார்கள் பயிரிடுவதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ஹெக்ரெயார்களுக்கு 15,000 ரூபா நிதி மானியமாக வழங்கப்படவுள்ளது.
மேலும் இந்த தீர்மானம் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாகவே எட்டப்பட்டுள்ளது.