1950களில் இருந்து சினிமாவில் பயணிக்க துவங்கியவர் நடிகை மனோரமா. இவரை ஆச்சி என செல்லமாகவும் அழைப்பார்கள். இந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக விலங்கினார். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தார்.
நகைச்சுவையில் ஆண்களை மிஞ்சும் அளவிற்கு பெண்களாலும் நடிக்க முடியும் என காட்டிய இவர், தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விருதுகளையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடக குழுவில் நடித்துக்கொண்டிருந்த நடிகை மனோரமா, அக்குழுவில் இருந்த எஸ்.எம். ராமநாதன் என்பவரை காதலித்து 1964ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கடந்த 2015ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மனோரமா. பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனோரமாவின் மகன்
இவருடைய மறைவு தமிழ் சினிமாவிற்கு மாபெரும் இழப்பை கொடுத்தது. நடிகர் மனோரமாவிற்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் பெயர் பூபதி. இந்த நிலையில், நடிகை மனோரமா தனது மகன் பூபதியுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.