43 வயதில் கே.ஜி.எப் யாஷுடன் கைகோர்க்கும் முன்னணி நடிகை.. யார் தெரியுமா

137

 

கேஜிஎப் படத்திற்கு பின் இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துக்கொண்டார் யாஷ். அடுத்ததாக இவர் நடிக்கவுள்ள திரைப்படம் தான் டாக்சிக். இப்படத்தை கீத்து மோகன்தாஸ் என்பவர் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் யார்யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்பது குறித்து இதுவரை அறிவிப்பு வராத நிலையில், பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர், இப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரீனா கபூர்
பாலிவுட் திரையுலகில் இளம் வயதில் இருந்தே பயணித்து வரும் இவர், திருமணத்திற்கு பின்பும், முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். இப்படியிருக்க முதல் முறையாக தென்னிந்திய சினிமா பக்கம் என்ட்ரி கொடுத்துள்ளார் கரீனா.

இந்த நிலையில், இதுகுறித்து கரீனா கபூர் பேசியுள்ளார் “முதல் முறையாக தென்னிந்திய சினிமாவில் நடிக்கிறேன். பான் இந்தியா திரைப்படமான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது எங்கு நடக்கிறது என தெரியாவிட்டாலும், இந்த தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறியுள்ளார்.

கரீனா கபூரை தொடர்ந்து கமல் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசனும் இப்படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE