தொடரை கைப்பற்றிய வங்கதேசம்: 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி!

92

 

இலங்கைக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது.

சதம் விளாசிய ஜனித் லியனகே
இலங்கை- வங்கதேச அணிக்கு இடையிலான 3 வது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆனால் வங்கதேச அணியின் அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர்.

பின்னர் நடுத்தர வீரராக களமிறங்கிய ஜனித் லியனகே (Janith Liyanage) இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டார்.

102 பந்துகளை எதிர்கொண்ட ஜனித் லியனகே 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 101 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அசத்தினார்.

ஜனித் லியனகே-வின் சிறப்பான ஆட்டத்தை அடுத்து இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்கள் குவித்தது.

தொடரை கைப்பற்றிய வங்கதேசம்
வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.

தொடக்க வீரராக களமிறங்கிய தன்சித் ஹசன்(Tanzid Hasan) 81 பந்துகளில் 84 ஓட்டங்கள் குவித்தார்.

அதிரடியாக விளையாடிய ரிஷாத் ஹொசைன்(Rishad Hossain) 18 பந்துகளில் 48 ஓட்டங்கள் பறக்கவிட்டார்.

இறுதியில் வங்கதேச அணி 40.2 ஓவர்கள் முடிவிலேயே 6 விக்கெட்டுகளை மட்டும் 237 ஓட்டங்களை குவித்தது.

SHARE