ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஷால் பட நடிகை.. ரசிகர்கள் ஷாக்

87

 

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து ரத்னம், துப்பறிவாளன் 2 ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது.

விஷால் நடிப்பில் வெளிவந்த கலகலப்பான திரைப்படங்களில் ஒன்று தீராத விளையாட்டு பிள்ளை. இப்படத்தை பிரபல இயக்குனர் திரு இயக்கியிருந்தார். இப்படத்தில் விஷாலுடன் இணைந்து மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

அதில் ஒருவர் தான் தனுஸ்ரீ தத்தா. இவர் அப்படத்தில் பிரகாஷ் ராஜின் தங்கையாகவும் நடித்திருந்தார். பாலிவுட் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.

ஆளே மாறிப்போன நடிகை
கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பின் இவர் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்த நடிகையா இவர்? ஆள் அடையலாம் தெரியாமல் மாறிவிட்டாரே என கூறி வருகிறார்கள்.

SHARE