CSKவின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்! அவரின் சொத்து மதிப்பு தெரியுமா?

114

 

2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை அணியின் புதிய தலைவராக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் IPL தொடரில் விளையாடுவதற்கு இவர் வாங்கும் சம்பளமும் இவருடைய முழு சொத்து மதிப்பு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

யார் இந்த ருதுராஜ்?
இந்தியாவைச் சேர்ந்த இளம் மற்றும் திறமையான கிரிக்கெட் வீரர்களுள் ருதுராஜ் கெய்க்வாடும் அடங்குவார்.

இவர் 1997ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி புனேவில் பிறந்தார்.

வலது கை துடுப்பாட்டரான இவர், மகாராஷ்டிர அணியின் 16 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் விளையாடியுள்ளார்.

பின் இந்தியன் பிரீமியர் லீக் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடினார். 2021 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாடி 635 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பையும் பெற்றார்.

2021 டி20 உலகக் கோப்பையில், ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இடம்பெற்றார்.

தற்போது 2024 ஆம் ஆண்டிற்கான IPL தொடரில் சென்னை அணிக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை ஆரம்பமாவுள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளனர்.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக ருதுராஜ் கெய்க்வாடிடம் இருப்பார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர் சென்னை அணியில் விளையாடுவதற்காக வாங்கப்படும் சம்பளம் குறித்து இணையத்தில் ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்து மதிப்பு
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, ருதுராஜ் கெய்க்வாட்டின் நிகர மதிப்பு 36 கோடி ரூபாய் ஆகும்.

2019 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக 20 லட்ச ரூபாவால் வாங்கப்பட்டார்.

பின் அவரது அபாரமான வெற்றியை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு 6 கோடி வழங்கி சென்னை அணிக்கா வாங்கப்பட்டார்.

கடந்த இரண்டு IPL சீசன்களிலும் இதே தொகைக்கு தக்கவைக்கப்பட்டார்.

2024 ஆம் ஆண்டின் நிலவரப்படி, ஒரு மாதத்திற்கு 50 முதல் 60 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார் என தெரியவந்துள்ளது.

SHARE