சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து தோனி விலகியது, அறிமுக விழாவில் தான் தெரியும் என CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தோனி விலகல்
2024 ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் CSK மற்றும் RCB அணிகள் நாளை மோதுகின்றன.
இந்த நிலையில் சென்னை அணியின் தலைவர் பதவியில் இருந்து எம்.எஸ்.தோனி (M.S.Dhoni) விலகியது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.
அவருக்கு பதிலாக கோப்பை அறிமுக விழாவில் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றார். இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
சிஇஓ விளக்கம்
அவர் கூறுகையில், ”இன்று நடைபெற்ற கோப்பை அறிமுக விழாவில் சென்னை அணியின் தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்ற பின்பு தான், தோனி பதவியில் இருந்து விலகியது எண்களுகே தெரிய வந்தது.
இது அவருடைய முடிவு. இந்த முடிவுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். தோனி எது செய்தாலும் அது அணியின் நலனுக்காகவே இருக்கும். இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு நிச்சயம் ருதுராஜிடம் அவர் கலந்து பேசியிருப்பார்” என தெரிவித்துள்ளார்.