ஐசிசி தரவரிசைப் பட்டியலின் டாப் 10யில் நுழைந்த பதும் நிசங்கா! பந்துவீச்சிலும் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை வீரர்கள்

116

 

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இலங்கை துடுப்பாட்ட வீரர் பதும் நிசங்கா டாப் 10 இடங்களில் நுழைந்துள்ளார்.

பதும் நிசங்கா
வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில், இலங்கை துடுப்பாட்ட வீரர் பதும் நிசங்கா 151 ஓட்டங்கள் குவித்தார்.

இதன்மூலம் ஒருநாள் தரவரிசையில் 3 மூன்று இடங்கள் முன்னேறிய நிசங்கா, 8வது இடத்தைப் பிடித்துள்ளார். டாப் 10 இடங்களில் உள்ள ஒரே இலங்கை வீரரும் இவர் தான்.

146 ஓட்டங்கள் எடுத்த சரித் அசலங்கா (Charith Asalanka) 2 இடங்கள் முன்னேறி 14வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை ஒருநாள் டாப் 10யில் இலங்கை வீரர்கள் இடம்பெறவில்லை. ஆனாலும், டி20 தரவரிசையில் இலங்கை வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

வணிந்து ஹசரங்கா 687 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மஹீஷ் தீக்ஷணா 659 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர். டி20 ஆல்ரவுண்டர் பட்டியலிலும் வணிந்து ஹசரங்காவே (228) இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அணிகள் தரவரிசையில் இலங்கை அணி டெஸ்ட், டி20யில் 8வது இடத்திலும், ஒருநாள் போட்டியில் 7வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை (துடுப்பாட்ட வீரர்கள்)
பாபர் அசாம் (பாகிஸ்தான்)
சுப்மன் கில் (இந்தியா)
விராட் கோஹ்லி (இந்தியா)
ரோஹித் ஷர்மா (இந்தியா)
ஹாரி டெக்டர் (அயர்லாந்து)
டேர்ல் மிட்செல் (நியூசிலாந்து)
டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா)
பதும் நிசங்கா (இலங்கை)
தாவித் மலான் (இங்கிலாந்து)
வான் டெர் டுசன் (தென் ஆப்பிரிக்கா)

SHARE