விண்வெளி சுற்றுலா நிறுவனம் ஒன்று உங்களை விண்வெளிக்கு அழைத்துச்சென்று, நட்சத்திரங்களுக்கு கீழே சௌகரியமான இரவு உணவை வழங்க முன்வருகிறது.
உலகில் தொடங்கப்பட்டுள்ள மிகச் சில முதல் சொகுசு விண்வெளி-சுற்றுலா நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் SpaceVIP இதனை அறிவித்துள்ளது.
விண்வெளியில் இரவு உணவு உண்பது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் என சொகுசு விண்வெளி சுற்றுலா நிறுவனமான SpaceVIP தெரிவித்துள்ளது.
நெப்டியூன் விண்கலத்தில் புவி சுற்றுப்பாதையின் விளிம்பிற்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு இரவு உணவு சாப்பிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
2025 இறுதிக்குள் தொடங்கப்படும் இந்த பணி தொடங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து ஒரு லட்சம் அடிக்கு மேல் அழைத்துச்செல்லப்படுவார்கள் என SpaceVIP கூறுகிறது. இலக்கை அடைய 6 மணி நேரம் ஆகும்.
ஆனால், ஒவ்வொரு டிக்கெட்டின் விலையும் 495,000 டொலர் (ரூ.15.10 கோடி) மட்டுமே என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.