தொலைக்காட்சியில் பணிபுரியும் போது நடிகை நயன்தாராவிற்கு அதை செய்தேன்- இப்போது என்னை பார்த்தபோது, நடிகை ஓபன் டாக்

82

 

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நயன்தாரா அங்கு பிரபல டிவியில் தொகுப்பாளராக இருந்து பிறகு படத்தில் நடிக்க தொடங்கினார்.

தமிழில் ஐயா படம் மூலம் இந்தப்பக்கம் வர முதல் படமே அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. அப்படத்திற்கு பிறகு நயன்தாரா சினிமா பயணம் வெற்றியின் உச்சத்திற்கே சென்றது.

ஆனால் இடையில் அவர் சில காதல் கிசுகிசுவில் சிக்க படங்கள் நடிப்பது குறைந்தது. ஆனால் பிரச்சனை ஒருபக்கம் வைத்துவிட்டு மீண்டும் நடிக்க தொடங்கியவர் இப்போது பாலிவுட் வரை சென்றுவிட்டார்.

ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்தவர் அடுத்து சில ஹிந்தி படங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஆரம்பக்கட்டம்
சமீபத்தில் சின்னத்திரை பிரபலமும், நடிகையுமான மாலா பார்வதி பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர், கேரளாவில் தொலைக்காட்சியில் பணியாற்றிய போது தான் நயன்தாராவை முதன்முறையாக பார்த்தேன்.

அப்போது சமயம் என்னும் நிகழ்ச்சிக்காக தன் பெற்றோருடன் வந்திருந்தார் டயானா. அவருக்கு நான் மேக்கப் போட்டுவிட்டுக்கொண்டிருந்தபோது அவரது பெற்றோர்கள் என்னிடம், ‘எங்கள் மகளுக்கு இரண்டு பட வாய்ப்புகள் வந்திருக்கின்றன.

இதில் எந்த இயக்குநர் படத்தில் நடிக்கலாம் என கேட்டார்கள். நான், சத்யான் அந்திக்காடு இயக்கத்தில் கரியரை தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரை செய்தேன். அதன்படியே சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் கரியரை தொடக்கினார் அவர்.

பல வருடங்களுக்கு பிறகு அன்னபூரணி ஷுட்டிங் ஸ்பாட்டில்தான் நயன்தாராவை பார்த்தேன். என்னை பார்த்தவுடன் என்னிடம் வந்து ரொம்பவே சாதாரணமாக பேசினார்.

இத்தனை ஆண்டுகள் என்னை நினைவு வைத்திருந்து அவர் பேசியது சந்தோஷமாக இருந்தது. தான் ஒரு பெரிய ஸ்டார் என்று பந்தாவே அவரிடம் இல்லை என பேசியுள்ளார்.

SHARE