நடிகர் ரஜினிக்காக சாப்பிடாமல் விரதம் இருந்த நடிகை ஸ்ரீதேவி- எதற்காக தெரியுமா?

91

 

நடிகை ஸ்ரீதேவி, இந்திய சினிமா கொண்டாடிய 80களில் கலக்கிய பிரபலம்.

இந்திய சினிமாவில் தனது சிறப்பாக நடிப்பின் மூலம் பெரிய ஆளுமையாக இருந்து அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர்.

தமிழ் சினிமாவில் அதிகமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்திருந்த ஸ்ரீதேவி, சிவாஜியுடன் கவரிமான் படத்தில் மகளாகவும், சந்திப்பு என்ற படத்தில் அவருக்கே ஜோடியாகவும் நடித்திருந்தார்.

1986-க்கு பின் இந்தி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய ஸ்ரீதேவி, இந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக தமிழில் 2018ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி அங்கேயே மரணமடைந்தார்.

நடிகையின் விரதம்
ரஜினியும், ஸ்ரீதேவியும் ஒரே நேரத்தில் தான் கோலிவுட்டில் வளர தொடங்கினர். அது இருவருக்கும் இடையில் ஒரு நெருக்கத்தினை கொடுத்தது. தேவையான நேரத்தில் எப்போதுமே துணை இருப்பார்களாம்.

அப்படி ஒருமுறை ரஜினிக்காக ஸ்ரீதேவி 7 நாள் விரதம் இருந்து இருக்கிறாராம். 2011ல் ரஜினிக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது, ஆபத்தான கட்டத்தில் அவரை சிங்கப்பூர் அழைத்து சென்றவர்.

அப்போது இந்த விஷயம் தெரிந்த ஸ்ரீதேவி சீரடி சாய்பாபாவிடம் வேண்டி ரஜினிக்காக சாப்பிடாமல் 7 நாள் விரதம் இருந்து இருக்கிறார்.

ரஜினி உடல்நலம் தேறியவுடன் தான் தன் விரதத்தை முடித்தாராம், இதனை ஸ்ரீதேவியே தனது நண்பர்களிடம் சொல்லி இருக்கிறார்.

SHARE