நடிகை ஹன்சிகா மோத்வானியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

95

 

மும்பையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நாயகிகள் பலர் உள்ளார்கள் அதில் ஒருவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி.

குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடிக்க தொடங்கியவர் தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

தென்னிந்திய படங்கள்
தெலுங்கில் தேசமுதுரு, காந்த்ரி, மஸ்கா உள்ளிட்ட படங்களில் லீட் ரோல்களில் நடித்து பிரபலமானவர் அப்படி தமிழ் பக்கம் வந்தவர் நடித்த முதல் படம் தனுஷின் மாப்பிள்ளை தான்.

அதன்பின் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, மீகாமன், புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்தார்.

காதல், திருமணம்
முன்னணி நாயகியாக வளர்ந்து வந்த ஹன்சிகா முன்னணி நடிகருடன் காதல் வலையில் சிக்கி பின் பிரிந்தார். பின் சில வருடங்களுக்கு முன் டிசம்பர் மாதம் சோஹெல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தொழில்
எல்லா நாயகிகளை போல ஹன்சிகாவும் தான் சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களில் அவர் முதலீடும் செய்திருக்கிறாராம்.

சொத்து மதிப்பு
33 வயதாகும் நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணத்திற்கு பிறகும் படங்கள் நடித்து சம்பாதித்து வருகிறார்.

அப்படி படங்கள், சொந்த தொழில் என சம்பாதித்து நடிகை ஹன்சிகா மோத்வானி ரூ. 45 கோடி வரை சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE