எங்க விட்டாலும் திரிஷா வீட்டுக்கு தான் போவேன்.. பிரபல நடிகர் கூறிய விஷயம்

93

 

தென்னிந்திய சினிமாவில் தற்போது பிசியான நடிகையாக இருப்பவர் திரிஷா. அஜித்துடன் விடாமுயற்சி, தெலுங்கு சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்.

மேலும் லியோ படத்தை தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் 6வது முறையாக Goat திரைப்படத்திலும் கைகோர்த்துள்ளார். ஆம், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் Goat திரைப்படத்தில் ஒரே ஒரு குத்து பாடலுக்கு நடிகை திரிஷா நடமாடியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவர் ராணா. இவர் பாகுபலி படத்திற்கு பின் தென்னிந்திய அளவில் பிரபலமானார். இவர் ஒருமுறை விருது விழா ஒன்றில் திரிஷா குறித்து பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

திரிஷா வீட்டுக்கு தான் போவேன்
அந்த விருது விழாவை தொகுத்து வழங்கிய நடிகர் மிர்ச்சி சிவா ‘சென்னையில் உங்களுக்கு தெரியாத ஒரு ஏரியாவில் உங்களை கொண்டு போய் விட்டால், அங்கிருந்து வீட்டுக்கு சென்று விடுவீர்களா’ என கேள்வி கேட்டார்.

இதற்கு ‘கண்டிப்பாக போய்விடுவேன். சென்னையில் என்னை எங்கு கொண்டு போய் விட்டாலும், ஒரே ஒரு நபரின் வீட்டிற்கு நான் சென்றுவிடுவேன். அவர் வேறு யாருமில்லை நடிகை திரிஷா தான். ஆம், சென்னையில் எங்கு என்னை விட்டாலும், நான் திரிஷாவின் வீட்டிற்கு சென்று விடுவேன்’ என கூறினார்.

SHARE