முதல்முறையாக அமெரிக்காவில் இந்தியாவின் அமுல் பால் !

131

 

முதல்முறையாக அமெரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய பால் கூட்டுறவு அமைப்பான ‘அமுல்’, பால் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

அதன்படி இந்தியாவின் அமுல், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் மத்திய மேற்கு சந்தைகளில் பால் விற்பனை செய்ய, ‘மிச்சிகன் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன்’ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

50 நாடுகளுக்கு பால் பொருட்கள் ஏற்றுமதி
இதன் வாயிலாக, இந்தியாவின் பால் கூட்டுறவு வரலாற்றிலேயே முதன்முறையாக, அமுல் நிறுவனத்தின் பால் தான் அமெரிக்காவில் விற்கப்பட உள்ளமை விசேட அம்சமாகும். குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பில் உள்ள பால் விற்பனையாளர்கள், அமுல் என்ற பிராண்டு பெயரில் இந்தியாவில் பால் விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ஜெயன் மேத்தா கூறுகையில்,

அமுல், உலகம் முழுதும் 50 நாடுகளுக்கு பால் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்க சந்தைகளுக்கும் நாங்கள் பால் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். எனினும், தற்போது தான் முதல் முறையாக அமுல் பெயரில் அங்கு பால் விற்பனை செய்யப்படவுள்ளது.

இது நிறுவனத்துக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். அதேவேளை அமெரிக்காவின் மிச்சிகன் பால் உற்பத்தியாளர்கள் சங்கம், 108 ஆண்டுகள் பழமையானது.

மேலும், அமெரிக்காவின் முதல் 10 கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்று. அமெரிக்காவில், எங்கள் தயாரிப்புகள் அவர்களின் தயாரிப்புகளுக்கு துணைபுரியும். ஓஹியோவில் உள்ள சங்கத்தின் பால் ஆலை, சிகாகோ, டல்லாஸ் மற்றும் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள மற்ற பகுதிகளில் உள்ள சந்தைகளை அணுக, அமுலுக்கு உதவியாக இருக்கும்.

அமெரிக்காவில் அமுல் பிராண்டின் கீழ் 3.80 லிட்டர் மற்றும் 1.90 லிட்டர் பால் பேக்குகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த புதிய பால் இந்தியாவில் உள்ள அதே கலவையைக் கொண்டிருக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE