மொஸ்கோ தாக்குதலில் 152 பேர் பலி ; அறைக்கம்பத்தில் தேசிய கொடி

135

 

மொஸ்கோ crocus களியாட்ட மண்டபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 152 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள மக்கள் மொஸ்கோ உட்பட ரஷ்யாவின் அனைத்து பகுதிகளிலும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் தமது சோகத்தை வெளியேற்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் தாக்குதல் சம்பவம் குறித்து வாக்கு மூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.

விசாரணைகள் முடிவடைந்த பின் இத்தாக்குதல்களின் உண்மை நிலை வெளியாகும் என விசாரணைகளை நடத்தி வரும் பாதுகாப்புப் பிரிவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

SHARE