இனி WhatsApp-ல் Voice Message-ஐ கேட்காமலேயே Text மூலம் படிக்கலாம்- அசத்தல் அப்டேட்

130

 

WhatsApp செயலி குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கிறது.

இந்த செயலி Meta குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு Updates வழங்கப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் WhatsApp பயனாளர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை கடந்து சென்று வருகிறது.

Meta நிறுவனம் WhatsApp அவ்வப்போது புது புது அம்சங்களை கொண்டுவந்து பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்தவகையில், WhatsApp, voice transcription அம்சத்தை சோதனை செய்து வருகிறது. அதாவது, Audio Message-களை Text- ஆக படிக்க இந்த அம்சம் பயன்படுத்தப்படும்.

WhatsApp பயனர்கள் transcription-ஐ Unlock செய்ய கூடுதலாக 150MB Data செலவிட வேண்டும்.Transcription Download செய்யப்பட்டதும், Audio-வை கேட்டாகமலே Text மூலம் தகவலை தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp உங்கள் போனில் உள்ள Speech recognition பயன்படுத்தி End-to-end encrypted செய்யப்பட்ட Transcription-களை வழங்குகிறது.

அதோடு பயனர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், Transcription உங்கள் மொபைலிலேயே செய்யப்படும்.

இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.

SHARE