அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் குழந்தைகளுக்கான சமூக வலைத்தளங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அது குறித்த சட்டத்தில் புளோரிடா மாகாண ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார்.
புளோரிடா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக கணக்குகளை வைத்திருப்பதை சட்டம் தடை செய்கிறது.
தற்போது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக வலைத்தள கணக்குகளை நீக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என புளோரிடா மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.