அஜித் தவறவிட்ட சூப்பர்ஹிட் திரைப்படம்.. அது என்ன படம் தெரியுமா

101

 

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் நடிப்பில் இதுவரை பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதே போல் சில ஹிட் திரைப்படங்களையும் அவர் தனது திரை வாழ்க்கையில் தவறவிட்டுள்ளார்.

அஜித் தவறவிட்ட படம்
அப்படி அவர் தவறவிட்ட படம் தான் மருதமலை. சுராஜ் இயக்கத்தில் அர்ஜுன், வடிவேலு போன்ற நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் மருதமலை. இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது அஜித் தானாம்.

ஆனால், அந்த சமயத்தில் கிரீடம் படத்தில் நடித்து வந்துள்ளார் அஜித். அப்படத்திலும் போலீஸ் ரோல், மருதமலை படத்திலும் போலீஸ் ரோல் என்பதால் மருதமலை படத்தை நிராகரித்துவிட்டாராம்.

SHARE