தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தான் இரண்டாம் திருமணம் நடந்தது. தன்னுடைய காதலரை கரம்பிடித்து அமலா பால் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
அமலா பால் நடிப்பில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆடு ஜீவிதம். மலையாளத்தில் உருவாகி பான் இந்தியா படமாக வெளிவரவிருக்கும் இப்படத்தை பிளஸ்ஸி இயக்கியுள்ளார். பிரித்விராஜ் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
சம்பளம்
இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அமலா பால், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தான் நடித்து படத்திற்காக ப்ரோமோஷன் செய்ய வேண்டும் என நினைந்து அதில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.
6 வருடங்கள் உழைப்புக்கு பின் திரையரங்கில் வெளிவரவிருக்கும் ஆடு ஜீவிதம் படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை அமலா பால் ரூ. 80 லட்சம் சம்பளம் வாங்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.