விஜயகாந்த் மகனின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடிகளா?

147

 

தமிழ் சினிமாவும் சரி, தமிழக அரசியலிலும் மக்கள் இவர் இல்லையே என ஏங்குவது விஜயகாந்த்தை நினைத்து தான். சினிமாவில் தனது நாட்டுப்பற்றை வெளிக்காட்டி வந்தார்.

சிறந்த தலைவனுக்கு ஏற்ற குணங்களுடன் சினிமா, அரசியல் என இரண்டிலும் கலக்கி வந்தார். அரசியலில் நுழைந்த சில காலங்களிலேயே எதிர்க்கட்சி என்ற அளவிற்கு வளர்ந்தார்.

ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால் அப்படியே வீட்டில் முடங்கினார், இப்போது அவர் நம்மைவிட்டு மொத்தமாக பிரிந்துவிட்டார்.

சொத்து
இந்த நிலையில் அரசியலில் விஜயகாந்த் விட்ட இடத்தில் இருந்து அவரது மகன் விஜயபிரபாகரன் சாதிப்பார் என தெரிகிறது.

தேர்தலில் போட்டியிட போகும் விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் சொத்து விவரத்தை வேட்புமனு தாக்கலில் பதிவு செய்துள்ளார்.

அதில் விஜயபிரபாகரனுக்கு ரூ 11.38 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ 6.57 கோடி அசையா சொத்துகளும் உள்ளதாக பதிவு செய்துள்ளார்.

SHARE