சூக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சிவாங்கிக்கு திருமணமா?- அவரே போட்ட பதிவு

97

 

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி இன்னும் பல நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமாகி சினிமாவில் சாதிப்பவர்கள் பலர் உள்ளார்கள்.

அப்படி பாடல் மற்றும் சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் சிவாங்கி. சூப்பர் சிங்கரில் முதலில் பங்குபெற்ற இவருக்கு அந்த நிகழ்ச்சி பெரிய ரீச் கொடுக்கவில்லை.

அப்படியே குக் வித் கோமாளி நிகழ்ச்சி பக்கம் வந்தவர் மக்களை தனது காமெடிகள் மூலம் கவர்ந்துவிட்டார். சில சீசன்களில் கோமாளியாக இருந்தவர் கடைசி சீசனில் குக்காக மாறி நிறைய வித்தியாசமான சமையலை சமைத்து அசத்தினார்.

இப்போது நிறைய இசைக் கச்சேரிகள், வெளிநாடு நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடி வருகிறார்.

லேட்டஸ்ட் பதிவு
அண்மையில் சிவாங்கி தனது சமூக வலைதளத்தில் திருமணம் மற்றும் பிள்ளை பெற்றுக்கொள்வது குறித்து பதிவு ஒன்று போட ரசிகர்கள் நிறைய கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து அவர் தனது Threads பக்கத்தில், சோசியல் மீடியாவை திறந்தாலே நான் யாருக்காவது திருமணம், நிச்சயம் முடிந்தது, கர்ப்பமாக இருப்பதையோ தான் பார்க்கிறேன், அந்த கட்டத்தில் தான் தற்போது நான் இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

SHARE