விஜய் டிவியில் KPY உள்ளிட்ட பல ஷோக்களில் காமெடியனாக கலக்கி ரசிகர்களை ஈர்த்தவர் பாலா. அவர் அதன் பின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.
மேலும் சமீப காலமாக விஜய் டிவியில் இருந்து அவர் விலகி இருக்கிறார். விரைவில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி 5ம் சீசனிலும் அவர் கலந்துகொள்ளமாட்டார் என்றே தெரிகிறது.
பாலா படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதுவும் அவர் எல்லா பணத்தையும் இப்படியே உதவியாக செய்து கொண்டிருந்தால் வருங்காலத்தில் பிச்சை தான் எடுப்ப என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அது ஒருபுறம் இருக்க நடிகர் லாரன்ஸ் உடன் சேர்ந்து வறுமையில் இருக்கும் பெண்ணுக்கு ஆட்டோவை வாங்கி கொடுத்து இருக்கிறார் பாலா. அந்த வீடியோ நேற்று வைரல் ஆனது.
ஹாஸ்பிடல் கட்டும் பாலா
இந்நிலையில் KPY பாலா தான் ஒரு மருத்துவமனை கட்டி அதில் எல்லோருக்கும் இலவச சிகிச்சை தர போவதாக அறிவித்து இருக்கிறார்.
தான் உதவி செய்வதை பற்றி பல விதமான விமர்சனங்கள் வந்தாலும், அதை எல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து உதவி செய்து வருவதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது