IPL 2024: வரலாற்றை முறியடித்த ஆட்ட நாயகனுக்கு ரூ.80 லட்சத்தில் தங்க சங்கிலி

123

 

2024 ஆம் ஆண்டிற்கான IPL தொடரில் வரலாற்றை முறியடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துடுப்பாட்ட வீரருக்கு நிர்வாகம் அளித்த பரிசானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வரலாற்றை முறியடித்த ஆட்ட நாயகன்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 277 ஓட்டங்களை குவித்து வெற்றிப் பெற்றது.

முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மயங்க் அகர்வால் 11 ஓட்டங்களில் தோல்வி அடைந்தார்.

கடைசி வரை களத்தில் நின்ற கிளாசன் ருத்ர தாண்டவம் ஆடினார். 34 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் குவித்தார்.

இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 277 ஓட்டங்கள் குவித்து, IPL தொடரின் வரலாற்றை முறியடித்தார்கள்.

அதாவது அதிகப்படியான புள்ளிகளை பெற்றுள்ளார்கள்.

அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற பெருமையை பெற்றதற்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் சிறப்பாக ஆடிய அனைத்து வீரர்களுக்கு பரிசு வழங்கியுள்ளது.

அந்தவகையில் ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள தங்க சங்கிலி வழங்கப்பட்டுள்ளது.

தங்க சங்கிலி
இவருக்கு அணிவிக்கப்பட்ட இந்த தங்க சங்கிலியின் பெறுமதி இந்திய மதிப்பில் 80 இலட்சம் என கூறப்படுகிறது.

மேலும் இந்த தங்க சங்கிலி ரசிகர்களின் பார்வையில் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE