என் அம்மா எனது போராட்டத்தைப் பார்த்தார், அவர் பெருமைப்படுவார்! சொன்னதை செய்துகாட்டிய ரியான் பராக்கை பாராட்டிய சங்ககாரா

112

 

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற வைத்த இளம் வீரர் ரியான் பராக்கை, இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா பாராட்டியுள்ளார்.

ரியான் பராக் அபார ஆட்டம்
ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸை வீழ்த்தியது.

ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் 84 ஓட்டங்கள் விளாசியதன் மூலம் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

போட்டிக்கு முன்பாக பேசிய ரியான் பராக், ‘கடந்த 3 நாட்களில் நான் படுக்கையில் இருந்தேன். நான் வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டிருந்தேன். எனது போராட்டத்தை எனது தாய் பார்த்தார். இன்றிரவு அவர் என்னை நினைத்து பெருமைப்படுவார்’ என்று கூறியிருந்தார்.

அவர் கூறியது போலவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, ரியான் பராக் ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 84 ஓட்டங்கள் குவித்தார்.

குமார் சங்ககாரா பாராட்டு
அவரது ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதன்மூலம் முன்னர் அவர் கூறியதுபோலவே செய்துள்ளார்.

ரியான் பராக்கிற்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்ககாராவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சங்ககாரா கூறுகையில், ”அவர் (பராக்) எங்களுக்காக செய்யக்கூடிய மிக முக்கியமான பங்கு அவருக்கு இருப்பதாக நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். மேலும், சீசனுக்கு முன் அவர் செய்த கடின உழைப்பு, உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் அடித்த அனைத்து ஓட்டங்களும், அந்த முடிவில் ஒரு பங்கைக் கொண்டிருந்தன” என தெரிவித்துள்ளார்.

SHARE