ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இமாலய இலக்கு
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக கிளாசன் 80 ஓட்டங்களும், ஹெட் 62 ஓட்டங்களும், அபிஷேக் சர்மா 63 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் இமாலய இலக்கினை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் 34 ஓட்டங்களும், ரோகித் ஷர்மா 26 ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த நமன் தீர் 14 பந்துகளில் 30 ஓட்டங்களும், ஹர்திக் பண்டியா 24 ஓட்டங்களும் எடுத்தனர்.
திலக் வர்மா
சிக்ஸர்களை பறக்கவிட்ட திலக் வர்மா 34 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசினார். இதில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளும் அடங்கும்.
டிம் டேவிட் மற்றும் ஷெப்பர்ட் அதிரடியில் மிரட்டி வெற்றிக்காக போராடினர். ஆனாலும், மும்பை இந்தியன்ஸ் 246 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
இறுதிவரை களத்தில் நின்ற டிம் டேவிட் 22 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்களும், ஷெப்பர்ட் 6 பந்தில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 15 ஓட்டங்களும் விளாசினர்.