புதிய மைல்கல்லை எட்டிய Honda Elevate., 30,000 கார்கள் விற்பனை

595

 

ஹோண்டா எலிவேட் (Honda Elevate) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 30000 கார்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான Honda Cars India தனது தனித்துவமான SUV Elevate மூலம் புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளது.

2023 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்த கார் 30,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்துள்ளது.

தொடங்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் இந்த மைல்கல்லை கடந்தது மிகப்பாரிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

தற்போது சந்தையில் முக்கிய அபிமான கார்களான Kia Seltos, Hyundai Creta, Maruti Suzuki Grand Vitara, Toyota Urban Cruiser Highrider, MG Aster, Citroen C3 Aircross, Skoda Kushak மற்றும் Volkswagen Tigun ஆகிய கார்களுடன் Honda Elevate போட்டியிடுகிறது.

இந்தக் கார் இந்திய சந்தையில் 1.5-litre, 4-cylinder naturally aspirated engine-உடன் கிடைக்கிறது.இந்த எஞ்சின் அதிகபட்சமாக 6600 rpm-மில் 119 bhp பவரையும், 4300 rpmமில் 145 Nm torque-யும் வெளிப்படுத்தும்.

இது 6-speed manual transmission, CVT automatic transmission with 7-steps ஆகிய விருப்பங்களுடன் வருகிறது. Elevate மொடல் கார் Diesel மற்றும் Hybrid பவர் ரயில் விருப்பங்களில் வெளியிடப்படாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விரைவில் Elevate காரின் முழு மின்சார பதிப்பையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது Honda.

Honda Elevate SV, V, VX மற்றும் ZX வகைகளில் கிடைக்கிறது. SV தவிர, காரின் அனைத்து வகைகளும் automatic transmission option-உடன் கிடைக்கும்.

ஹோண்டா எலிவேட்டின் விலை ரூ.11.58 லட்சம் முதல் ரூ.16.20 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) ஹோண்டா எலிவேட் சமீபத்தில் இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.

ஜப்பானில் விற்கப்படும் எலிவேட் காரின் பெயர் ‘WR-V’. ஹோண்டா தனது கார்களை துருக்கி, மெக்சிகோ, மத்திய கிழக்கு, நேபாளம், பூடான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

SHARE