போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் “லொகேஷன் குடு மல்லி”சிக்கினார்

133

 

போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் “லொகேஷன் குடு மல்லி” என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

படல்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​மினுவாங்கொட, நில்பனாகொட, ஹேன்பிடகெதர, கல்கந்த, துனகஹ, கட்டுவெல்லேகம, அலுதேபொல ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் செய்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 6,120 மில்லி கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மினுவாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை ஒரு வார காலம் தடுப்பு காவல் உத்தரவில் விசாரணைக்கு உட்படுத்த படல்கம பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

SHARE