குற்றவாளிகளை கைது செய்ய களமிறங்கியுள்ள மோட்டார் சைக்கிள் குழுக்கள்

108

 

குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய 20 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றவாளிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளுக்காக சுமார் 100 அதிகாரிகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மேல் மாகாணம் மற்றும் காலி மாவட்டத்திற்கு இந்த பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE