பல் வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை, பரகல, மொரவக பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், யுவதி ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட பல்வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி பல்கலைக்கழக படிப்பை முடித்து ஆசிரியர் தொழிலுக்காக காத்திருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.