மசாஜ் நிலையத்தில் சேவை பெற சென்ற பெண் திடீர் மரணம்!

138

 

மஹரகம பிரதான வீதியில் அம்பில்லவத்தை சந்திக்கு அருகில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் சேவை பெற வந்த பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 53 வயதுடைய மஹரகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவயந்துள்ளது.

உயிரிழப்பிற்கான காரணம்

சேவை பெற வந்த நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக மசாஜ் நிலையத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாரடைப்பு காரணமாக குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE