முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்

165

 

மாந்தை மேற்கு காயாநகர் கிராம சேவையாளர் பிரிவின் ஈச்சளவக்கை கிராமத்தின் காட்டுப்பகுதியில் சட்டவிரோத மேற்கொள்ளப்பட்ட கசிப்பு உற்ப்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த சட்டவிரோத உற்பத்தி நிலையமானது இன்று(31.03.2024) பொலிஸ்மா அதிபரின் சிந்தனைக்கு அமைய ஈச்சளவக்கை கிராமத்தின் மருதம் விளையாட்டு கழக உறுப்பினர் ஆறு பேர் ஊடகவியலாளர் சகிதம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத செயற்பாடுகள்
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 2 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இப்படியான சட்டவிரோத செயற்பாடுகள் குறித்த கிராமத்தில் செய்பவர்களால் பல இளைஞர்கள், சிறுவர்கள் பாடசாலை செல்லாது கசிப்பு மாபிகளுக்கு அடிமையாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE