சுன்னாகம் பகுதியில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு!

113

 

சுன்னாகம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற 68 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

ஆலயமொன்றுக்கு தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் இயலாத நிலையில் வரம்பொன்றில் அமர்ந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இறப்புக்கான காரணம்
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனையில் இறப்புக்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகின்றது.

SHARE