9 மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுவனின் எலும்புகள் கண்டுபிடிப்பு

94

 

பிரான்ஸில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இரண்டரை வயது எமிலி எனும் சிறுவன் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சிறுவனின் ‘எலும்புகள்’ கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Alpes-de-haute-Provence மாகாணத்தின் haut-Vernet எனும் மலையடிவார கிராமத்துக்கு சுற்றுலா சென்ற சிறுவனே காணாமல் போயிருந்தான்.

காணாமல்போன சிறுவனின் எலும்புகள்
கடந்த வருடம் ஜூலை 8 ஆம் திகதி மாலை 5.15 மணிக்கு இறுதியாக எமிலியை கண்டிருந்தார்கள். அதன் பின்னர் சிறுவன் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் , பல மாதங்களாக சிறுவனை தேடும் பணிகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், மார்ச் 30 ஆம் திகதி மலையேற்றவாதி ஒருவர் சில மனித எலும்புத் துண்டுகளை அவதானித்து உடனடியாக அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதையடுத்து கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் மீட்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டபோது பின்னர் அவை எமிலியுடனுடையது தான் என உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் காணாமல்போன சிறுவனின் எலும்புகள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE