மாஸ் விலைக்கு விற்கப்பட்ட கமல்ஹாசனின் இந்தியன் 2- எங்கே தெரியுமா?

106

 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தான் இயக்கிய வெற்றிப்படங்களில் ஒன்றான இந்தியன் படத்தின் 2ம் பாகத்தை இயக்க இருப்பதாக எப்போதோ அறிவித்துவிட்டார்.

அப்பட வேலைகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் தான் தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்க தொடங்கினார்.

இப்படத்தின் முதல் பாடல் ராம் சரண் பிறந்தநாளான மார்ச் 27ம் தேதி வெளியாகி இருந்தது.

அதோடு தயாரிப்பாளர் தில் ராஜு இன்னும் 5 மாதங்களில் கேம் சேஞ்சர் முழுமையாக உங்களுடையதாகும் என தெரிவித்திருந்தார்.

இந்தியன் 2
ராம் சரண் படத்திற்கு முன் இந்தியன் 2 வெளியாகும் என தெரிகிறது.

1996ம் ஆண்டு இந்தியன் வெளியான போது கர்நாடகாவில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனால் இந்தியன் 2 படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை வாங்க போட்டி நிலவியுள்ளது.

இந்த நிலையில் தான் இந்தியன் 2 படத்தின் கர்நாடக திரையரங்கு விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியுள்ளதாம். இதுவரை வெளியான தமிழ்ப் படங்கள் அனைத்தையும்விட அதிக தொகைக்கு இந்த உரிமை வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE