தோனியை கிண்டலடித்து ஸ்டேட்டஸ் போட்ட மனைவி சாக்ஷி., ரிஷப் பன்டுக்கு வாழ்த்து

112

 

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் கூல் என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்கள் குவித்து தனது பழைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவதாக அறிவித்து பல வருடங்கள் ஆகியும், தோனியின் ஆட்டம் மாறவில்லை.

ஆம், விசாகப்பட்டினத்தில் உள்ள இந்த மைதானத்தில்தான் தோனி 2005 ஆம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 148 ஓட்டங்கள் எடுத்தார்.

19 ஆண்டுகளுக்குப் பிறகும் தோனியின் கை பலம் குறைந்ததாகத் தெரியவில்லை.

ஆனால், தோனியின் அதிரடியான ஆட்டத்தையும் மீறி, சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தோற்றது.

192 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 171 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கடைசியில் டோனி அதிரடியாக 4 பவுண்டரிகள், 3 அபார சிக்ஸர்களை விளாசினாலும் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.

இந்நிலையில், மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி சிங் தற்போது தனது கணவரை கிண்டல் அடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

போட்டி முடிந்ததும், பரிசளிப்பு விழாவில் தோனி புன்னகைத்தார். இது குறித்து பல நெட்டிசன்கள் தோனியை வசைபாடினர்.

இதை கவனித்த சாக்ஷி சிங், என்ன தோனி! நாம் போட்டியில் தோற்றுவிட்டோம் என்பதை மறந்துவிட்டீர்களா என்பது போல கிண்டல் செய்து, அவரது புகைப்படத்தையும் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார்.

அதே ஸ்டேட்டஸில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பன்டுக்கு வாழ்த்து தெரிவித்தார் சாக்ஷி.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலிருந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

SHARE