7000 ஓட்டங்கள், 100 சிக்ஸர்கள்., 4 மெகா சாதனைகளைப் படைத்த எம்எஸ் தோனி

171

 

IPL 2024 போட்டியில் CSK விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனி நான்கு மெகா சாதனைகளை படைத்தார்.

விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இடையிலான ஐபிஎல் போட்டியில் எம்எஸ் தோனி ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்கள் எடுத்தார்.

அவர் தனது அட்டாக் இன்னிங்ஸில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார்.

டி20 கிரிக்கெட்டில் 7000 ஓட்டங்களைக் கடந்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் பேட்டர் ஆனார் எம்எஸ் தோனி.

42 வயதான இவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் 5000 ஓட்டங்களைக் கடந்த முதல் விக்கெட் கீப்பர் ஆவார்.

மேலும், IPL போட்டிகளில் 19வது மற்றும் 20வது ஓவரில் 100 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

நேற்றைய போட்டியில், இன்னிங்ஸின் கடைசி ஓவரில் 20 ஓட்டங்கள் அடித்து Anrich Nortje-வை திணறடித்தார் தோனி.

தோனி இதுவரை 6 முறை 20வது ஓவரில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

ஐபிஎல்லில் 20வது ஓவரில் அதிக முறை 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை எடுத்தவர்கள்:
எம்எஸ் தோனி – 6 முறை

ரோஹித் சர்மா – 3 முறை

மார்கஸ் ஸ்டோனிஸ் – 3 முறை

ஏபி டி வில்லியர்ஸ் – 3 முறை

யுவராஜ் சிங் – 2 முறை

டேவிட் மில்லர் – 2 முறை

கிறிஸ் மோரிஸ் – 2 முறை

ஹர்திக் பாண்டியா – 2 முறை

கெய்ரோன் பொல்லார்ட் – 2 முறை

IPL-ன் 17வது சீசனில் தோனி துடுப்பாட வருவது இதுவே முதல் முறை. சிஎஸ்கே 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தாலும், முன்னாள் கேப்டன் டோனி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான முந்தைய இரண்டு போட்டிகளிலும், அவர் மற்ற பேட்டர்களை அவருக்கு முன்னால் உயர்த்தினார்.

SHARE