யாழ் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) சொத்துக்காக நடந்த மோசடி

97

 

யாழ் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) சொத்துக்காக நடந்த மோசடி குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மூதாட்டியின் கை பெரு விரலில் மை கிடந்தமையை அடுத்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மூதாட்டியின் சொத்துக்களை சட்டவிரோதமாக பெற்று இருக்கலாம் எனும் சந்தேகத்திலேயே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கைவிரல் அடையாளம்
மானிப்பாய் (Manipay) பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணிடம் கைவிரல் அடையாளம் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறித்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE