உலகளவில் உள்ள அனைத்து இசை ரசிகர்களின் மனதிலும் வருடிய ஒரே புயல் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
ஆஸ்கர் நாயகன் என கொண்டாடப்பட்டு வரும் இவர் சமீபத்தில் தான் ஆடு ஜீவிதம் படத்திற்கு இசையமைத்திருந்தார். இசையமைத்தார் என்று சொல்வதை விட, அப்படத்திற்கு உயிர் கொடுத்திருந்தார் என்று சொன்னாலும் மிகையாகாது.
அடுத்ததாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ராயன், காதலிக்க நேரமில்லை, ஜீனி, தக் லைஃப், ராம் சரண் 16 ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன.
ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 1995ஆம் ஆண்டு சைரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் முழு சொத்து மதிப்பு ரூ. 1700 கோடிக்கும் மேல் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து கொண்டிருக்கும் இவர், ஒரு படத்திற்காக ரூ. 8 முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.