பாலிவுட் நடிகைகளை கலாய்த்த விஜய் டிவி மணிமேகலை

105

 

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் மணிமேகலை. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய பின் நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் கடந்த சீசனில் இருந்து தொகுப்பாளினியாக மாறியுள்ளார். இந்த நிலையில், மணிமேகலை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பாலிவுட் நடிகைகளை கிண்டல் செய்யும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகைகளை கலாய்த்த மணிமேகலை
விமான நிலையில், பாலிவுட் நடிகைகள் வந்த என்ன நடக்கிறதோ, அதை நகைச்சுவையான முறையில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை விமான நிலையத்திற்கு வருதைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது, அதற்கு நடிகை மிடுக்கென போஸ் கொடுப்பது என மணிமேகலை நடித்து அசத்தியுள்ளார்.

மேலும், விமானத்திற்கு நேரம் ஆவதை போல் கிளம்பும்போது பத்திரிகையாளர்கள் போஸ் கொடுக்க சொல்லி கேட்பதை போன்றும், அதற்கு ஒவ்வொரு கேமராவுக்கும் மாறி மாறி நடிகைகள் போஸ் கொடுப்பதை போன்றும் அச்சு அசலாக அப்படியே செய்து காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

SHARE