தலைவர் 171 படத்தில் லியோ பட வில்லன்.. பெரிய சம்பவம் இருக்கு

103

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ள திரைப்படம் தலைவர் 171. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், டைட்டில் டீசர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளிவரவுள்ளது. வழக்கம் போல் லோகேஷ் ஸ்டைலில் மாஸான டீசர் வெளிவரும் என எதிர்பார்க்கின்றனர்.

இப்படத்தில் இதுவரை பார்க்காத ரஜினியை நாம் அனைவரும் பார்ப்போம் என்றும், அதற்கான வேலைகள் நடந்து வருகிறார் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

பெரிய சம்பவம் இருக்கு
இந்த நிலையில், தலைவர் 171 படத்தில் சாண்டி மாஸ்டர் கமிட் ஆகி இருக்கிறார் என தெரியவந்துள்ளது. ஆனால், நடிகரா அல்லது நடன இயக்குநரா என தெரியவில்லை. கண்டிப்பாக தலைவர் 171ல் பெரிய சம்பவம் இருக்கிறது என அவரே கூறியுள்ளார்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் நடன இயக்குனராக பணிபுரிந்த சாண்டி மாஸ்டர், அதன்பின் லியோ படத்தில் சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE