திருமணத்தால் ஜீ தமிழ் சீரியலில் இருந்து வெளியேறும் பிரபல நடிகை- யார் தெரியுமா, அவருக்கு பதில் இவரா?

99

 

சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சியில் ஒன்று ஜீ தமிழ்.

கார்த்திகை தீபம், கனா, நலதமயந்தி, சீதா ராமன், அண்ணா என நிறைய ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

அப்படி வெற்றிகரமாக ஓடும் ஒரு தொடரில் இருந்து நாயகி வெளியேறிய செய்தி தான் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

ஜீ தமிழில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கனா.

பிரிந்து கிடக்கும் அப்பா மகள் எப்படி ஒன்று சேர்கிறார்கள், ஓட்டப்பந்த போட்டியில் நாயகி எப்படி சாதிக்கிறார் என்பது தான் சீரியலின் கதைக்களம்.

விலகிய நாயகி
கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரில் நாயகியாக தர்ஷனா அன்பரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது தர்ஷனாவிற்கு திருமணம் கைகூடியுள்ளதால் இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளாராம்.

அவருக்கு பதில் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான டோனிஷா என்பவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

SHARE