பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த உணவில் விஷம் கலந்த விஷமிகள்

111

 

தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீட்டின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் உழவனூர் பகுதியில் இன்று(2) காலை இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்றைய தினம்(2) காலை இருவீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீட்டு உரிமையாளர் இல்லாத சமயத்தில் வீட்டின் ஒரு அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் உடைகள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த மதிய உணவிலும் விஷமிகளால் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணம் – அராலி கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்று நேற்று(1) இரவு தீயில் எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE