இம்ரான் விஷம் வைத்து கொல்லப்படலாம் – மனைவி குற்றச்சாட்டு

106

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தோஷகானா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையின்போது அடியாலா கிளை சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சிக்கப்பட்டதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோல் இம்ரான்கானின் 3-வது மனைவியான புஷ்ரா பீபி தோஷகானா ஊழல் வழக்கு மற்றும் முஸ்லிம் திருமண சட்டத்தை மீறியது ஆகிய 2 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இம்ரான்கானின் வீடு கிளை சிறையாக மாற்றப்பட்டு, அதில் புஷ்ரா பீபி அடைக்கப்பட்டுள்ளார்.

 

பாகிஸ்தான் சிறையில் இம்ரான் விஷம் வைத்து கொல்லப்படலாம் ; மனைவி குற்றச்சாட்டு | Imran Poisoned In Pakistan Accusation Of Wife

இந்த நிலையில் தோஷகானா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையின்போது அடியாலா கிளை சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சிக்கப்பட்டதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தனது மனைவிக்கு ஏதும் விபரீதம் நேர்ந்தால் அதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதியே பொறுப்பு எனவும் இம்ரான்கான் தெரிவித்தார்.

அதேபோல் கழிவறையை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் திரவத்தை தனக்கு உணவில் கலந்து கொடுத்ததாகவும் இதனால் தனக்கு கண் வீக்கம், மார்பு மற்றும் வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும் புஷ்ரா பீபி தெரிவித்துள்ளார்.

 

SHARE