நாவுல நோக்கி பயணித்த லொறி மீது யானை மோதியதில் வாகனம் கவிழ்ந்து, இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து மொரகஹகந்த – வடுருமுல்ல பிரதேசத்தில் நேற்று(05) இடம்பெற்றுள்ளது.
மேலதிக சிகிச்சை
இவ்விபத்தில் லொறியின் பின் தளத்தில் பயணித்த சிங்கபுர சூரியவெவ பகுதியைச் சேர்ந்த திலுக நுவன் (வயது 25) மற்றும் நாவல, கணேவத்த நிகடலுபொத்த பகுதியைச் சேர்ந்த தனஞ்சய நவரத்ன ஆகியோரே பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை லொறியில் பயணித்த ஏனையவர்கள் படுகாயமடைந்து அம்பானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.