தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் எஸ் ஜே சூர்யா. எந்த ரோலாக இருந்தாலும் நடித்து பாட்டையே கிளப்பி விடுவார்.
இவர் ஸ்பைடர், மாநாடு, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும், ஹீரோவை விட அதிகம் ஸ்கோர் செய்தது எஸ் சூர்யா தான்.
கூட்டணி
நமக்கு எப்படி எஸ் ஜே சூர்யாவோ, மலையாளத்தில் நடிப்பு அரக்கனாக இருப்பது பகத் பாசில். இவர்கள் இருவரும் ஒரே படத்தில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்த நிலையில் ரசிகர்கள் நினைத்தது போல் எஸ் சூர்யாவும் பகத் பாசிலும் மலையாள படத்தில் ஒன்றில் இணைய உள்ளார்களாம். அந்த படத்தை ஜெயா ஜெயா ஜெயா படத்தின் இயக்குனர் விபின் தாஸ் இயக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.