மர்மமான முறையில் உயிரிழந்த பெண் குழந்தை: விசாரணையில் வெளியான தகவல்

122

 

மாளிகாவத்தை (Maligawatte) பகுதியில் ஒப்பந்தத்தின் மூலம் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்பட்ட 4 வயது 7 மாத பெண் குழந்தையொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒப்பந்தத்தின் மூலம் நான்கு வயது குழந்தையை வேறு தரப்பினருக்கு வழங்க ஏற்பாடு செய்தமை தொடர்பில் குழந்தையின் தந்தை உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஏனையவர்களில் குழந்தையை தத்தெடுக்க ஒப்புக்கொண்ட 45 வயதுடைய பெண்ணும், அவரது 19 வயது மகள் மற்றும் 15 வயது மகனும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் விசாரணை
மாளிகாவத்தை லக் செவன அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிகமாக வசித்து வந்த மொஹமட் ரிப்கான் ஹைசா என்ற குழந்தையே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளது.

இதற்கமைய, கைது செய்யப்பட்ட நால்வரிடமும் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE