ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளராக நாகலிங்கம் ரட்ணலிங்கம் தெரிவு

101

 

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் இன்று (07.04.2024) காலை வவுனியா(Vavuniya) கோயில் புளியங்குளத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றுள்ளது.

செயலாளர் பதவி
இதன்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் பதவி எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு புளொட் அமைப்பிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் மூத்த தலைவர் நல்லநாதர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அண்மையில் மரணமடைந்த நிலையில் அவரின் இடத்திற்காக புளொட் அமைப்பை சேர்ந்த நாகலிங்கம் ரட்ணலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE