பாறுக் ஷிஹான்
கல்முனை பிரதேச செயலாளராக கடந்த 01-03-2021 அன்று கடமையேற்று இன்று வரை தொடர்ந்து பல சேவைகளை ஆற்றிக்கொண்டிருக்கும் ஜே. லியாகத் அலியின் காத்திரமானதும் துணிகரமானதுமான சேவையைப் பாராட்டி கல்முனை மக்களால் கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
ஆஷாத் ப்ளாஸா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற கல்முனையன்ஸ் போரத்தின் வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் நிகழ்வின் போது இக்கெளரவம் பிரதேச செயலாளருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர சபை எந்திரியர் ஜெளஸி அப்துல் ஜப்பார், உதவி திட்டமிடல் பணிப்பாளரும், கல்முனையன்ஸ் போரத்தின் கணக்காய்வாளருமான ஏ.எல்.மஜீட், போரத்தின் சிரேஷ்ட செயற்பாட்டாளர் ஜலீல் சுலைமான், போரத்தின் நிருவாக பணிப்பாளர் எம்.எம்.காமில் மற்றும் போரத்தின் நிறைவேற்று பணிப்பாளர் முபாரிஸ் எம்.ஹனீபா ஆகியோரால் பிரதேச செயலாளருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி கெளரவம் வழங்கப்பட்டது.
மேலும் கல்முனையின் முதுசம் முன்னாள் ஜித்தாவிற்கான தூதுவரும், முன்னாள் வக்பு சபை உறுப்பினருமான டாக்டர் ஏ.உதுமாலெப்பை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கல்முனை நகர ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவருமான அப்துல் ரஸாக் ஜவாத், சிரேஷ்ட சட்டத்தரணி யூ.எம்.நிஷார், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி எம்.எச். தெளபீக், ஜம்இய்யத்துல் உலமா கல்முனைக் கிளை தலைவர் மெளலவி ஏ. எல்.முர்ஷித் ஆகியோரால் நினைவுச் சின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.