வேலை வாங்கி தருவதாக பெருந்தொகை பணமோசடி செய்த பெண்

83

 

மொனராகலை பிரதேசத்தில் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மொனராகலை பிரிவின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் கோட்டை ரஜமஹா விஹார மாவத்தையில் வசிக்கும் 55 வயதுடைய பெண் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி முதல் இந்த வருடம் ஜனவரி மாதம் 11ஆம் திகதி வரை மொனராகலை பிரதேசத்தில் உள்ள 13 ஆண், பெண்களுக்கு வெளிநாட்டு வேலை வழங்குவதாக உறுதியளித்து தனது வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்துள்ளார்.

பொலிஸில் முறைப்பாடு
இருப்பினும், எவருக்கும் வேலை வழங்கப்படவில்லை என தொம்பகஹவெல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய, மொனராகலைப்பிரிவு விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவின் தளபதி வில்பிரட் சில்வா விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

SHARE