நீண்ட ஆயுளின் ரகசியத்தை பகிர்ந்த பிரித்தானியாவின் மிக அதிக வயதுடைய நபர்!

127

 

பிரித்தானியாவை சேர்ந்த 111 வயது முதியவரான ஜான் ஆல்பிரட் டின்னிஸ்உட் என்பவர் இப்போது உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார்.

சமீபத்தில் உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை வெனிசுலாவை சேர்ந்த 114 வயதான ஜூவான் விசென்டே பெரேஸ் மோரா உயிரிழந்தார்.

இவ்வாறான நிலையில் ஜான் ஆல்பிரட் டின்னிஸ்உட் தனது நீண்ட ஆயுளின் ரகசியத்தை யூடியூப்பில் பகிர்ந்துள்ளார்.

அதில் நீண்ட ஆயுளுக்காக உணவு ரகசியங்கள் என்று எந்த சிறப்பு அம்சமும் இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீன் மற்றும் சிப்ஸ் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

எதைப்பற்றியும் அதிகமாக சிந்தித்தால் அதிகம் எதையும் செய்ய முடியாது. பிறந்த தேதி, மரபியல், குடும்ப வரலாறு போன்றவை நீண்ட ஆயுளில் பங்கு வகித்தாலும் தனி நபரின் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனக்கு என்று தனியாக எந்த சிறப்பு உணவு முறையும் இல்லை. ஆனாலும் சமச்சீர் உணவு, பழங்கள், காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அளவோடு உண்பது போன்றவை நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமையும் என்றார்.

மேலும்தனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது எனவும், மதுவை அரிதாகவே அருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE